இருப்போர் கொடுக்க! இல்லாதோர் எடுக்க! – அன்பு சுவர்

  • by

துறையூர் காவல் நிலையம் முன்பு “இருப்போர் கொடுக்க””இல்லாதோர் எடுக்க” என்ற மையக் கருத்தின் அடிப்படையில் அன்பு சுவர் அமைக்கப்பட்டது.

ஜேசிஐ (Junior Chamber of international) என்ற பன்னாட்டு அமைப்பின் துறையூர் கிளை, காவல்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் ஆகியன இணைந்து துறையூர் காவல் நிலையம் முன்பு இருப்போர் கொடுக்க இல்லாதோர் எடுக்க என்ற மையக்கருத்து அடிப்படையில் அன்பு சுவர் ஒன்றை ஏற்படுத்தியுள்ளனர்.

இதனை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆ. மயில்வாகனன் துவக்கி வைத்தார். அருகில் துணை போலீஸ் சூப்பிரண்டு (ம) துறையூர் காவல்துறை ஆய்வாளர் மற்றும் துணை காவல் துறை ஆய்வாளர் மற்றும் இருபால் காவலர்கள் உடனிருந்தனர்.

அன்புச் சுவரில் முகக் கவசம் பிஸ்கட் பல் துலக்கும் ப்ரஸ்- பேஸ்ட், உணவு பொட்டலங்கள், பழ வகைகள், ரொட்டிகள், புதிய பழைய உடைகள், குடிநீர், தட்டு டம்ளர், சானிடைசர், ஆகியன வைக்கப்பட்டிருந்தது. இதனை தேவைப்படுவோர் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம். விருப்பமுள்ளோர் தன்னால் இயன்ற உதவிப் பொருள்களை அன்பு சுவரில் வைக்கலாம். அன்புச் சுவர் அருகே வைக்கப்பட்டுள்ள பதிவேட்டில் உதவிதேவைப்படுவோர் அதில் பதிவு செய்தால் ஜேசிஐ அமைப்பினர் நேரடியாக சென்று கோரிய உதவியை செய்வார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *